செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி,
புகைப்படம் ரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை கமுடையார் துளுவ வேளாளர் சமூக அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் பொறியாளர் திரிசூல் நாராயணன் அவர்கள் நினைவேந்தல் மற்றும் திருவுருவ பட திறப்பு விழா திருவண்ணாமலை உண்ணாமலையம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரீடு தொண்டு நிறுவன இயக்குநர் வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமை தாங்கினார். பிஜேபி மாவட்ட பொதுச் செயலாளர் ம.சதீஷ்குமார் வரவேற்புரை யாற்றினார். புதிய நீதி கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், கு.செந்தில்நாதன் அகமுடையர் அரண் காஞ்சிபுரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆந்திர மாநில முதலியார் நலவாரிய தலைவர் திரு.பி.ஜி.புல்லட் சுரேஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மறைந்த நாராயணன் அவர்களின் திருவுருவ படத்தை திறந்துவைத்து நினைவஞ்சலி உரையாற்றினார்.
அகமுடையர் சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சட்டபாதுகாப்பு மகளிர் மேம்பாடு, மருத்துவ உதவி போன்ற பல்வேறு நலப்பணிகளை செய்து வந்த நாராயணனுடைய பணியை அனைவரும் நினைவுக் கூர்ந்து போற்றத் தக்கதாகும். அகமுடையர் சமுதாயத்தின் வரலாற்றை பறைசாற்றக் கூடிய நிகழ்வு என்பது மாமன்னர் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப் பட்ட திருப்பத்தூரும் அவர்கள் நினைவுச் சின்னமாக கட்டிய காளையார் கோவிலும் ஆகும்.
ஜம்பு தீவு பிரகடனம் அறிவித்து முதல் இந்திய சுதந்திர போராளியாக இருந்து வெள்ளையர்கள் உடைய சூழ்ச்சியால் தூக்கு கயிற்றை முத்த மிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு திருவண்ணாமலையில் சிலை அமைக்க ஒரு லட்ச ரூபாய் நன் கொடை அளிப்பதாகவும் தான் பதவி யேற்றிருக்கிற ஆந்திர மாநிலத்தில் சித்தூரிலும் மருதுபாண்டியருக்கு தன் சொந்த செலவில் சிலையை அமைத்து அவர்களின் வீரத்தை என்றும் நினைவுகூர்வோம் என்று பேசினார்.
மருத்துவ உதவி கோரிய சந்திரகலா என்பவருடைய கணவர் கிட்னி பிரச்சனைக்காக ரூ.10ஆயிரம் புல்லட் சுரேஷ் வழங்கினார்.
திரிசூல் நாராயணன் அவர்களின் நினைவை போற்றுகின்ற வகையில் தொடர்ந்து 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 இடங்களில் பிடிக்கும் அகமுடைய சமுதாய மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கி சிறப்பிக்கப்படும் என்றும் வேலைவாய்ப்புக்கான பல்வேறு வழிகாட்டுதல்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பயன் பெறக்கூடிய சுய தொழில் தனியார் வேலை வாய்ப்பு மற்றும் அரசுப் பணிக்காக தேர்வு பயிற்சிகள் அளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று நிகழ்ச்சியில் தலைமை வகித்த வழக்கறிஞர் தனஞ்செயன் பேசினார்.
மகளிரணி மலர்கொடி, பரிமளா, சந்திரகலா, சுமதி, சரஸ்வதி பாபு ஆகியோரும் இமயன் பிரதர்ஸ் டாஸ் இளைஞரணி நிர்வாகிகள் வழக்கறிஞர் காசி, நயம்பாடி சிவலிங்கம், எஸ்எம்ஜி பிரபு ஆரணி அகமுடையர் சங்கம் அஜீத் கடலாடி, வினோத் ஆதமங்கலம், அருண் பார்த்திபன் மருதுசேனை, மகேந்திரன், ஓம்சக்தி சிவா, நார்த்தாம் பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், ஓரவந்தவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிராஜ், செங்கம் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் ராணுவ வீரர் சங்கர், சரவணன், பி.கே.சேட்டு, தரணிதரன், பரமனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், அசுவநாதசுரணை ஊராட்சி மன்ற தலைவர் மணி, புதிய நீதிக்கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் கஜேந்திரன், கணபதி, நந்தினி பதிப்பகம் சண்முகம் ஆகியோர் பேசினர்.
சீடு தொண்டு நிறுவன இயக்குநர் ப.கி.ஏழுமலை நன்றி கூறினார்.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்ரி ஆறுமுகம் ஓய்வு, செங்கம் ராஜா டிஎம்எஸ் பொறுப்பாளர், பத்திரிகையாளர் சாய்செந்தில், பிஜேபி சதீஷ்குமார், ஹை டிஜிட்டல் இமயன், செங்கம் மகாபிரதோஷ அறக்கட்டளை தலைவர் திருமால் ஆகியோர் செய்திருந்தனர்.
அகமுடையர் பல்வேறு அமைப்புகளின் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.