திருவள்ளூர், நவ. 14 –
இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர் நிலை அரசு அலுவலர்கள் என ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் அன்பு பரிசுகளையும் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
இதுப் போன்று இன்று திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்த திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுகோல் ( பேனா ) வழங்கி குழந்தைகளுக்கு தனது குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இனிப்புக்களையும் பரிசுப்பொருட்களையும் பேற்றுக் கொண்ட குழந்தைகள் எம்.எல்.ஏ விற்கு தங்கள் புன்னகை கலந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.