மீஞ்சூர், ஏப். 07-

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆரணி அன்புவாணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன்,வல்லூர் சேகர் ,பழவை கன்னிமுத்து,இளைஞர் அணி அமைப்பாளர் தமிழரசன்,நெய்தவாயல் பொன்னரசு உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் துவக்கமாக கழக கொடி ஏந்தி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

இதில் கிளை கழக பிரதிநிதி, ஆர்.ஏழுமலை, கிளை இளைஞரணி அமைப்பாளர் சி. கோபி, விசிக ஒன்றிய பொறுப்பாளர் எஸ், பாஸ்கரன், மகளிர் அணி விசாலாட்சி, மோகனசுந்தரி, இந்துமதி, நாகபூஷணம், உள்ளிட்ட கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கிளை கழக செயலாளர் எஸ்,பாலகணபதி செய்திருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here