திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் எழும் விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எலத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உறுதி
கலசப்பாக்கம் ஆக 29 –
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது விவசாயிகளின் குறைகளை கேட்டு அவர்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக அவர்களுக்கு இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் பதிவு செய்த அன்றே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல் கொள்முதல் செய்து கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் இதுவரை 7 மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் செய்யும் வசதி இருந்தது இப்பொழுது 15 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து கொள்ளலாம் அதற்கு கூடிய விரைவில் போதுமான வசதிகளை அமைத்துக் கொடுக்கிறேன் மட்டுமில்லாமல் ஒரு நபர் நான்கு முறை மட்டும் தான் பதிவு செய்ய வேண்டும் அதற்கு மேல் பதிவு செய்தால் அவர்கள் பதிவை நிராகரிக்கப்படும் என்று கூறினார் அத்துடன் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் செல்வதற்கு பர்மிட் வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலகம் சென்றால் கிராம நிர்வாக அலுவலகங்கள் சரியான முறையில் இயங்க வில்லை என்று விவசாயிகள் சரமாரியான குற்றச்சாட்டுக்களை கோரிக்கையாக வைத்தனர். அப்போது விசாரணை செய்து உண்மை என்றால் அதற்கு அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 9 தேதி வரை பதிவு செய்து நெல் கொள்முதல் செய்து கொள்ளலாம். மேலும் இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தாசில்தார் ஆர்.ஜெகதீசன், ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், மற்றும் நெல் கொள்முதல் நிலைய அலுவலர் சிவக்குமார், உடன் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாக உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.