நெற்குன்றம், ஏப். 19 –
நெற்குன்றம் பகுதிக்குட்பட்ட 145-வது வட்டத்தில் அப்பகுதி மக்களால் அன்புடன் மக்கள் சேவகர் என்றழைக்கப்படும், மாமன்ற உறுப்பினர் D.சத்தியநாதன் வெகு நீண்டகால போராட்டத்திற்கு பிறகு 145 – வட்டத்தில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி அப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தரமான தார்சாலைகள் அமைக்க மாமன்றத்தில் அனுமதி பெற்று தந்துள்ளார்.
மேலும் இந்நிலையில், அப்பகுதியில் சென்னை பெருநகர் மெட்ரோ குடிநீர் வழங்கல் பணிகள் மிகவும் மெத்தன போக்கில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் தார் சாலைகள் அமைத்து கொடுக்கும் பணி தாமதமாகி வருகிறது. என்பதைக் கருத்தில் கொண்டு இன்று 145-வது வட்டத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அவ்வூர் பொது மக்களுடன் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் மெட்ரோ குடிநீர் வழங்கள் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட அரசுதுறை அதிகாரிகளை சந்தித்து அப்பிரச்சினைக் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறி கோரிக்கை மனுவினை வழங்கினார்,
மேலும் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் வழங்கிய கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அம்மனுவின் மீதான நியாமான கோரிக்கைகளை செய்து அப்பகுதியில் நடைப்பெற்று வரும் சென்னை பெரு மெட்ரோ குடிநீர் வழங்கல் பணியினை விரைந்து முடித்து தருவதாக அப்போது அவரிடம் உறுதியளித்தனர். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் குறுகிய காலக்கட்டத்திற்குள் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வரும் அம்மாமன்ற உறுப்பினருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.























