கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்புச்சாரா நலச்சங்கம் சார்பில் மே தினக் கொண்டாட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. அந்த வகையில் வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்புச் சாரா நலச் சங்கம் சார்பில் மே தினம் நிகழ்ச்சி மண்டல தலைவர் சபி சரவணன், தலைமையில் நடைபெற்றது.
அதில் மண்டல செயலாளர் வெங்கடேசன் கொடியேற்றி இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இதில் சிறப்பு விருந்தினராக பொறியாளர்கள் இளங்கோவன், சரவணன், ஆடிட்டர் பழனியப்பன், சொர்ணாம்பிகை ட்ரேடர்ஸ் உரிமையாளர் முத்துராமன், மித்ரா ட்ரேடர்ஸ் உரிமையாளர் இளமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அதில் மண்டல தலைவர் சபி சரவணன், மண்டல செயலாளர் வெங்கடேசன், மண்டல பொருளாளர் ஜான் பிரிட்டோ, நிர்வாகிகள் ஜெகநாதன், சரவணன், துரை, சண்முகம், செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, இறந்த பெயிண்டர்கள் 5 குடும்பத்திற்கு 3000, மதிப்புடைய மளிகை பொருட்கள் 25 கிலோ அரிசி மூட்டை 5000, ரொக்க தொகை வழங்கப்பட்டது.