மப்பேடு, ஜூலை, 21-
மப்பேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெரம்பாக்கம், இருளசஞ்சேரி,பிளஸ்தோட்டம் பகிதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் மனைவி எல்லாம்மாள் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 17 ஆம் தேதி காலை 8 மணியளவில் தனது மூத்த மகன் தனசேகர் வயது 29 தன்னிடம் சண்டைப் போட்டதாகவும் தன்னிடம் கோபம் கொண்டு வீட்டை விட்டு சென்றதாகவும், கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற மகன் திரும்ப வந்துவிடுவான் என்ற நிலையில் இதுவரை வீடு திரும்பாத தால் அக்கம் பக்கம் மற்றும் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து பார்த்த தில் இது வரை அவன் சென்ற இடம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை, ஆதலால் தனது மகன் இருப்பிடம் குறித்த தகவலையும் தனது மகனையும் தன்னிடம் போலீசார் தேடி தரும்படி அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து மப்பேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காணமல் போன எல்லம்மாளின் மகன் தனசேகரன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.