தஞ்சாவூர், மே.02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து வந்துள்ளனர் சிலர் தஞ்சையின் முதல் கான்வென்ட்டான தூய இருதய தொடக்கப் பள்ளியில் கடந்த 1966 முதல் 1972 ம் ஆண்டு வரை ஒன்றாக படித்த நண்பர்கள் . தோழிகள் லண்டன், ஆஸ்திரேலியா, கத்தார். மலேசியா உள்பட வெளி நாடுகளிலும், சிலர் தமிழகத்திலும் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஒன்று கூடிச் சந்திக்க முடிவெடுத்த 36 முன்னாள் மாணவ, மாணவிகள் 52 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களது பள்ளிப் பருவ கால சேட்டைகளை அசைப் போட்டனர்.

பள்ளி நண்பர்களை பார்த்ததும் ஆறு வயது குறைந்து விட்டதாக தனது மன ஓட்டத்தை வெளிப்படுத்தினார் ஒருவர். ஸ்கூல் லைஃப்ல எப்படி சந்தோசம் இருந்ததோ அந்த சந்தோஷம் இப்போ எல்லோர் முகத்திலும் இருக்கு என தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார் மற்றொரு முன்னாள் மாணவி

உடல்நிலை பாதிக்கப்பட்டு இங்கு வர முடியுமா என்ற நிலையிலிருந்த நான் இங்கு எல்லோரையும் சந்தித்த பிறகு தனக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளது என்ற நினைப்பே மறந்து போய்விட்டதாக குறிப்பிட்டார். தனது நண்பர்களை பார்த்த சந்தோஷத்தில் பேசிய ஒரு முன்னாள் மாணவர்

இங்கு பெரிய ஆளுங்களா எல்லாம் வந்து இருக்கீங்க நான் சாதாரண விவசாயி என தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டார் ஒரு முன்னாள் மாணவர். இப்படியாக கலகலப்பாக சந்திப்பு நிகழ்வு இனிதாக நிறைவேற கடைசியில் பள்ளி பருவத்தில் கிண்டலாக சொல்லிக் கொண்ட இட்லி என்ற வார்த்தையை இட்லி சொல்லுங்கப்பா எனக்கூறி குரூப் போட்டோ எடுத்து கொண்டு பிரியா விடையுடன் பிரிய மனம் இல்லாமல் முன்னாள் மாணவ மாணவிகள் பிரிந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here