காஞ்சிபுரம், ஜன. 01 –
காஞ்சிபுரம் அருகே உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள உள்ளரங்கத்தில் அக்கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தாராம் கலந்துகொண்டார். முன்னதாக இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் துணைவேந்தர் சாந்தாராம் சுமார் 400க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர்கிளிடையே உரை நிகழ்த்தினார்.
அப்போது, மருத்துவ மாணவ, மாணவிகள் ஒருமுக சிந்தனையுடன் மருத்துவ கல்வியினை பயின்று சமூக நோக்கோடு மருத்துவப் பணிகளில் ஈடுபட வேண்டும் என டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தாராம் மருத்துவ மாணவ , மாணவிகளிடையே உரை நிகழ்த்தும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணாக்ரகளின் பெற்றோர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு இக்கல்லூரியின் தாளாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் காலமானர். இந்நிலையில் அவருக்கு புகழஞ்சலி மற்றும் நினைவுஞ்சலியும் இவ்விழாவில் செலுத்தப்பட்டது.























