கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
பாபநாசம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அபினேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி தனியாக பேச வேண்டுமென சிறுமியை அபினேஷ் அழைத்துச் சென்று தனது நண்பர்களான ஸ்ரீதரன், அரவிந்தன் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது அதனை அரவிந்தன் தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது நண்பரான ராகுல் என்கிற குட்டிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை அவர் தன்னுடைய நண்பர்களின் வாட்ஸ்ஆப் குரூப்க்கு அனுப்பவே அது வைரலாக பரவத் தொடங்கிய நிலையில், அதுக் குறித்து தஞ்சாவூர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் அக்குற்றம் தொடர்பாக பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரையும் அந்த வீடியோவை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த ராகுல் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த ஐவர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.





















