கும்பகோணம், ஆக. 24 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா சேங்கனூர் ஊராட்சி, மேல தெருவில் உள்ள ஸ்ரீ  விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ கரும்பாயிரம் சாமி ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இத் திருக்கோயில்களுக்கான திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி புனிதநீர் நிரப்பிய கடங்கள் காவிரி ஆற்றிலிருந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாக சாலை பிரவேசமும், அதன் பிறகு, ஹோமத்திற்கான பல்வேறு நறுமண மூலிகை பொருட்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை பாராயணம் ஓதல் ஆகியவற்றுடன், முதல் கால யாக பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, மாலை என இரு கால யாக பூஜைகளும், பின்னர் 24ம் தேதி நேற்று காலை 4ம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு, கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மனமுருகி வழிப்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அக்கிராமத்து நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here