மதுரவாயல், ஜூன். 21 –
சென்னை புறநகர் பகுதியான மதுரவாயில் அடுத்த நெற்குன்றம் தனியார் பெட்ரோல் பங்க் வாசலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசுகையில் சமீப காலமாக இந்திய ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் மிக பிரதான தேவையான டீசல் பெட்ரோல் கேஸ் போன்ற எரிபொருட்களின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை குறைவாக இருக்கும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் விற்பனை குறைத்து விட்டு… தனியார் கார்பெட் முதலாளிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவதாகவும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றம் பழைய வெங்காய மண்டி அருகில் அமைந்துள்ள செல் பெட்ரோல் பங்கில் சாதாரன டீசல் லிட்டர் ஒன்றுக்கு 127 ரூபாய்க்கும், பிரிமீயம் Speed டீசல் விலையை 135 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
மேலும், அந்நிறுவனத்தின் முன்பு இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழக மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒன்றிய அரசே மாநில அரசே பெட்ரோல் டீசல் கேஸ் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வா என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.





















