புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் …
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள், புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த பூங்காக்களில் ஒன்றாகும். மேலும் அப்பூங்காவில் பல்வேறு அரிய வகையான மரங்களும் மூலிகைகளும் நிறைந்துள்ளது.
இப்பூங்காவிற்கு வருவதற்கு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பூங்காவில் உள்ள குழந்தைகள் ரயில், அங்குள்ள விளையாட்டு பகுதிகளில் வந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி செல்வது வழக்கமாகும். மேலும் அதேபோல் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவை சுற்றி பார்க்காமல் செல்வது கிடையாது.
இந்நிலையில் தற்போது ஸ்மார்ட்சிட்டி பணிகளுக்காக தாவரவியல் பூங்கா திறக்கப்படாமல் பூட்டி கிடப்பதால் கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.