செங்கல்பட்டு, ஜன. 1 –
2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சர்வ தேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புறாதான சின்னங்களான அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோவில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது
கொரோனா உருமாற்ற ஒமிக்ரான் தொற்று காரணமாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது
இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாமல்லபுரம் கடற்கரை வெறிச்சோடியே காணப்படுகின்றது
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்கள் குடும்பத்துடன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை தந்திருந்தனர்.
பலர் சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலும் முககவசம் அணிந்திலுந்தாலும் சிலர் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் தொல்லியல்துறையும் மாமல்லபுரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் இரண்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளனரா மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுபாடுகளை தீவிர படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.