தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த ஒராண்டில் ஓராயிரம் மகப்பேறு இறப்பு இல்லா பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளதை முன்னிட்டு அதனை தாய்மை திருவிழாவாக தஞ்சை மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரந்தை, சீனிவாசபுரம், கல்லுக்குளம், மகர்நோம்பு சாவடி ஆகிய நான்கு இடங்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
அந் நிலையங்களில் கடந்த ஓராண்டில் மகப்பேறு இறப்பு இல்லாமல் ஓராயிரம் பிரசவங்கள் நடைப்பெற்றுள்ளது. அதனை தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகததில் தாய்மை திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
அதற்காக ஆயிரம் தாய்மார்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு மிக பிரமாண்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் மகத்தான சாதனையை போற்றி செவிலியர்கள், பணியாளர்கள், ஆகியோருக்கு பாராபடு சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை மேயர் சண். இராமதாதன், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் வழங்கினார்கள். மேலும், பிரசவித்த ஆயிரம் தாய்மார்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.






















