புதுச்சேரி, மார்ச். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலிச் செய்தியாளர் சம்பத்

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுக் குப்பம் பகுதி சேர்ந்த சீனு தலைமையில் இளைஞர்கள் மகளிர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில்  உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குரூசுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சீனு தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி  பாரதிய ஜனதா கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ளும் விழா செஞ்சி சாலைத்திடலில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் முன்னிலையில் சீனு தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட மகளிர்கள் மற்றும் இளைஞர்கள்  தங்களை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் விபி ராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியின் துண்டு அணிவித்து சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியின் பாஜக தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் நகர மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி நகர மாவட்ட பொதுச் செயலாளர் பி எஸ் கணேஷ் முன்னாள் மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ராஜ்பவன் தொகுதியின் பொறுப்பாளர் ஆனந்த கண்ணன் மற்றும் ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த சேர்ந்த கதிரவன் மாலதி ஜானகிராமன் கோவிந்தன் முருகன் சதீஷ்குமார் பிரகாஷ் வள்ளி என்ற பச்சையப்பன் உமா மகேஸ்வரி முத்துக்குமார்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகளையும் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here