சென்னை, ஜன. 19 –
இன்று மதுரையில் உள்ள விரகனூரில் நடிகர் வடிவேலுவின் தாயரான திருமதி சரோஜினியம்மாள் என்கின்ற பாப்பா அவர்கள் உடல்நிலைக்குறைவால் இயற்கையெய்தினார் என்கின்ற செய்திக்கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வடிவேலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
அச்செய்திக்குறிப்பில் முதலமைச்சர், தங்களின் அன்புத்தாயார் இயற்கை எய்தினார் என்கின்ற செய்திக் கேட்டு தாம் மிக வருத்தப்பட்டேன் என்றும், மேலும் ஒரு குழந்தையை ஈன்றெடுத்து அதனை ஆளாக்கி பார்த்த அன்னையின் மறைவு என்பது, எந்தவொரு மகனுக்கும், ஈடு செய்ய முடியாத இழப்பாகும். எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அன்புத்தாயாரை இழந்து வாடும் வைகைப்புயல் வடிவேலு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார்.



















