சென்னை, அக். 25 –
ஜெய் சிவசேனாவின் பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்புக்கு புதிய மாநில பொதுச் செயலாளரை நியமனம் செய்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு.A.B.நடராஜன் அவர்களின் பரிந்துரைப்படி பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளராக சக்தி திரு. குருமஹா சன்னிதானம் வடபாதி ஆதீனம் Dr. ஸ்ரீ சக்தி முத்துக்குமாரசுவாமி அவர்களை கடந்த அக் – 23 சனிக்கிழமை அன்று நியமனம் செய்துள்ளோம். அதன்படி அன்று முதல் மாநில பொதுச்செயலாளராக அவர் பொறுப்பேற்று பணியாற்றுவார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் புதியதாக ஜெய் சிவசேனா தலைமையினால் நியமனம் செய்த அண்ணாருக்கு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றும் தேச நலப் பணியில்
பிரிங்கி .K.இராமசுப்பிரமணி
தலைமை ஒருங்கிணைப்பாளர்
ஜெய்சிவசேனா