கும்பகோணம், செப். 25 –
கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள 11 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்த்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நோய்நொடியின்றி சுகம் பெற வேண்டியும், சிறப்பு பிரார்த்தனையுடன், ஆஞ்சநேயருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, திரிசிதி அர்ச்சனை நடைபெற்றது, மேலும் இன்று அதிகாலை முதல் விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தின் நிர்வாகிகள் இராமன் பட்டர், மோகன் பட்டர், பாலாஜி பட்டர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.





















