கும்பகோணம், செப். 25 –

கும்பகோணத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர்.

கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம் அதிகம் பலன் கொண்ட  டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் இன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள், புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதன்படி புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு.  ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை. உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிப்பட்டு தங்கள் கடமையை நிறைவேற்றினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தர்ப்பணம் செய்தனர்.

மேலும் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து  காவிரி கரையில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து சென்றனர். இதனையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here