கும்பகோணம், டிச. 8 –

கும்பகோணம் எல்பிஎஸ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது,  இதில் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

 

    பக்தர்களை ரட்சிக்க, பெருமாள் பலவிதமான அவதாரங்களை எடுத்த போதும், இராமர் மற்றும் கிருஷ்ண அவதாரம் ஆகிய இரண்டு மட்டுமே பூரண அவதாரமாக கருதப்படுகிறது, இரண்டிலும் அனுமன், பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு, பெருமாளின் அனுக்கிரகம் பெற்றார், அத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயசுவாமியை வழிபடுவதன் மூலமும், அவரை நினைப்பதன் மூலமும், நல்புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பிணியின்மை ஆகியவற்றுடன், யாராலும் சாதிக்க முடியாததை சாதிக்கும் வல்லமையையும் நாம் பெற முடியும் என்பது நம்பிக்கை.

இத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயசுவாமி, கும்பகோணம் எல்பிஎஸ் சாலையில் வீரஆஞ்சநேயசுவாமி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார், இவருக்கு கும்பாபிஷேகம் செய்விக்க திட்டமிட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் செய்யப்பட்டு இது நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 06ம் தேதி திங்கட்கிழமை பூமி பூஜை, வாஸ்து பூஜையுடன் காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலை பிரவேசம், கும்பலங்காரம், மண்டலங்காரம், பிம்பலங்காரம் ஆகியவற்றுடன் யாகசாலை முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை 3ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹ_தியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் நடந்தது. அதனையடுத்து, திருவோண நட்சத்திரம், மகர லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது அதன் பின்னர், மூலமூர்த்தியான வீரஆஞ்சநேயசுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .

தொடர்ந்து இன்று மாலை பாலஆஞ்சநேயசுவாமி விசேஷ மான் வாகனத்தில் திருவீதியுலா காண்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here