சேலம், டிச. 8 –

கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி பகுதியில் வசிக்கும் ரஞ்சித் எனும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தலைவலி என அரசு மருத்துமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்து அவருக்கு இதயத்தில் அடைப்புவுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து  அதற்கான சிகிச்சை வசதி இங்கு இல்லையெனவும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அங்கு பணிபுரியும் ஊழியர் தெரிவித்ததாகவும் அதனைத்தொடர்ந்து அவர் சேலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்கிறோம் 30நிமிடத்தில் வெளியே வந்து உங்கள் பையன் வெளியே வந்து விடுவார் என்று கூறிவிட்டு, 6 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்து இதயத்திற்கு செல்லும் 2 இரத்த வால்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் உங்கள் பையன் சுயநினைவை இழந்து மூளைச்சாவு அடைந்து விட்டான். என மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மகனைப் பறிகொடுத்த பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் எங்கள் மகனை இழக்க நேர்ந்தது என புகார் அளித்ததின் பேரில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் திரண்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையின் முன் அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவரை #தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த அரசு மருத்துவமனை ஊழியர் யார் .. அரசு மருத்துவமனையை விட தனியார் மருத்துவமனையில் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுகிறதா ? தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய அரசு ஊழியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? பெற்றோரின் அனுமதி இல்லாமல் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது ? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததாக கூறப்படும் செவிலியரையும் கைது செய்ய வலியுறுத்தியும், அந்த தனியார் மருத்துவமனையை உடனடியாக மூட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here