செங்கல்பட்டு, டிச. 31
சென்னையில் 7 மணி நேரமாக பெய்யும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரிநீர் திறப்பு இல்லாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் 2,999 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 22 நெருங்கி இருப்பதாகவும் நீர்வரத்து 2000 கன அடியாகவும் இருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட உள்ளதால் தற்போது உபரிநீர் திறப்பு 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் கூடுதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உபரிநீர் திறப்பு நீர் வரத்தைப் பொறுத்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கக்கூடும் என நீர்வள ஆதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்





















