கும்பகோணம், ஜூலை. 17 –

கும்பகோணம் அருகே உள்ள துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இடுப்பொருள்கள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவினை அரசுத்தலைமைக்கொறடா தொடங்கி வைத்து இடுப்பொருள் தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கினார்.

துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் குறுவை சாகுபடி பணிகளுக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே கடந்த மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீரை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கோட்டூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிர்பார்க்கிறது.

இந்நிலையில் குறுவை சாகுபடி பணிகளுக்காக தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துகிலி கோட்டூர் திருலோகி உள்ளிட்ட கிராமத்தில் 2400 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ள 456 விவசாயிகளுக்கு  வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு டி ஏ பி, பொட்டாசியம் உள்ளிட்ட விவசாய இடுப்பொருட்களை  விவசாயிகளுக்கு அரசு தலைமைக்கொறடா கோவிச்செழியன் வழங்கினார்.

இந்நிகழ்வில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பழனிச்சாமி உதவி அலுவலர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here