கும்பகோணம், டிச. 29 –

கும்பகோணத்தில் இன்று தொடங்கி 15 நாட்களுக்கு நடைபெறும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தெரிவித்தார்

கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கியது இதனை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்

இக் கண்காட்சியில் ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், திருச்செங்கோடு, விருதுநகர், சேலம், திருநெல்வேலி, திருவாரூர், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அசல் ஜரிகை பட்டு சேலைகள், ஆஃபைன் ஜரிகை பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், வேஷ்டிகள், போர்வைகள் பலவண்ண படுக்கை விரிப்புகள், துண்டுகள் கைலிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது இக்கண்காட்சியில் 30 முதல் 65 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்று தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும் கண்காட்சியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாகவும் தலைமை கொறடா நிகழ்ச்சியின் போதும், செய்தியாளர்களை சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here