பூவிருந்தவல்லி, ஜூலை. 07 –
சென்னையடுத்த பூந்தமல்லி எழில்நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இத் தேவாலயத்தில் இன்று காலை பிரார்த்தனைக்காக சென்ற பொதுமக்கள் அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தேவாலயம் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பை மேட்டில் பதுங்கி இருந்த 8 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். மேலும் பிடிபட்ட நல்ல பாம்பை வனப்பகுதியில் சென்று விட்டு விடுவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
தேவாலயத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.






















