சென்னை, டிச. 28 –
சென்னை, செனாய் நகர், கஜபதி தெருவில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவ மனையின் 50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி அம் மருத்துவ மனையின் வளாகத்தில் கடந்த டிச 18 ஆம் தேதி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தொழுநோய் பணியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்து அவர்களை கௌரவித்தார்.
மேலும் அரசு பணியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற பின்னரும் தொடர் தொழுநோய் சிகிச்சை மற்றும் தடுப்பு பாதுகாப்பு பணியிலும் கிரிமால்டாஸ் பொன்விழா கமிட்டியிலும் உறுப்பினாராக இருந்து சேவை புரிந்து வரும் அ.து.குலோத்துங்கன் நிறுவனர்/ஆலோசகர் திருவள்ளுவர் தொழுநோயாளர் மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக்குழு. திருவள்ளூர் அவர்களுக்கும் அவரது அயராத சேவையைப் பாராட்டி எம்.பி. டாக்டர் வீ. கலாநிதி வீராசாமி நினைவுப் பரிசை வழங்கி அவருக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவர் Rev. Dr. குரியன் தாமஸ், மருத்துவமனை இயக்குனர் மரியநாதன், Dr. V. தர்மலிங்கம் (துணை இயக்குநர் தொழுநோய் சென்னை) மற்றும் மருத்துவ துறையில் பணியாற்றி வரும் பிரபல மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.




















