கும்பகோணம், பிப். 7 –
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் என பொதுமக்கள் கலந்துக்கொண்டு சாமி மற்றும் கோபுர தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்திட கமிட்டி அமைக்கப்பட்டு காந்தி பூங்கா பெரிய தெரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த நன்கொடை 2 லட்சத்து 68 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு கோவிலுக்கு வர்ணம் பூசி இன்று கும்பாபிஷேகம் நடைபெற திட்டமிடப் பட்டிருந்த நிலையில், இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக வசூல் செய்த தொகையில் ரூ. 1. 75 ஆயிரம் பணத்துடன் மாரியம்மன் திருக்கோவில் தலைவராக நியமிக்கப் பட்ட சுக்கம்பாளையம் தெருவை சேர்ந்த நபர் எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார் என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், அவரை தேடும் பணியிலும் விழாக் கமிட்டி உறுப்பினர்கள் ஈடுப்பட்டு வருவதாக தகவல் தெரிய வருகிறது.
இந்நிலையில் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சமயபுரம் மாரியம்மன் குழுமாயி பக்தர்கள் முருகன், சிவசுப்பிரமணியன் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா மற்றும் கமிட்டி நண்பர்கள் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து அவர்களுடைய சொந்த செலவில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.