கும்பகோணம், டிச. 23 –

கும்பகோணம் நகரப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்கள் அகற்றி அதிரடி நடவடிக்கையை வட்டார போக்கவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்தினார்கள்.

கும்பகோணத்தில்  நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார்கள் சென்றது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முக்கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை ஆகியோர், இன்று காலை பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளை  சோதனை செய்தனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின் போது 20 – க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.அதில் 10 தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து ஓட்டுனர்களை எச்சரித்தனர்.

இதுகுறித்து மோட்டர் வாகன ஆய்வாளர் செந்தாமரை கூறுகையில், ‘குறிப்பிட்ட அளவு ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் தான் பேருந்துகளில் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் அதிக ஒலி எழுப்புவதால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் திடீரென பதட்டமடைந்து விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் பேருந்து உரிமையாளர்கள் நடந்துகொள்ள வேண்டும்,’ என்று தெரிவித்தார் இந்த ஆய்வின்போது 2 பேருந்துக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பேருந்துகளில் விதிமுறைகள் மீறியதால் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here