திருவள்ளூர், பிப். 22 –

திருவள்ளூர் மாட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையால் உழவன் செயலியில் தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்விவரங்களை கண்டறிந்து விவசாயிகள் பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் கால விரயத்தை தவிர்க்கவும், வேலை ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடவும், வேளாண்மை இயந்திரமாக்குதல் தற்போதைய காலக்கட்டத்திற்கு இன்றியமையாததாகிறது எனவும், மேலும் அதிக விலையிலான இயந்திரங்களை வாங்கயிலாத விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவதுடன் அரசுத்திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகிறது எனவும், இருப்பினும் நெல் அறுவடை செய்யும் காலங்களில் விவசாயிகள் குறைந்த தானிய இழப்பு மற்றும் குறைந்த அறுவடை செலவுடன் நெல் அறுவடையை காலத்தே செய்வதற்கு நெல் அறுவடை இயந்திரம் தவிர்க்க முடியாததாகிறது. எனவும், மேலும் இக்காலக் கட்டங்களில் இயந்திரங்களின் தேவை அதிகரிக்கப்படும் போது, அதறைகான வாடகைத் தொகையும் உயர்ந்து விடுகிறது. இதனால் வேளாண் வருமானம் குறைவதால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலைமை ஏற்படுகிறது எனவும்,

இதனால் வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களின் மூலம் விவசாயிளின் தேவையை தீர்க்க முடிகிறதெனவும்,  மேலும் அந்நேரங்களில் தனியார்கள் வைத்திருக்கும்  நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் தெரிவதில்லை எனவும், இதனால் விவசாயிகள் காலத்தே அறுவடை செய்ய முடியா சீழ்நிலை ஏற்படுகிறதெனவும்,

மேலும் இக்குறையினை போக்கும் வகையில் தனியாருக்கு சொந்தமான 4456 நெல், மக்காச்சோளம், பயிறு, தானியவகைகள், ஆகியவற்றை அறுவடை செய்யும் இயந்திரங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களின் பெயர் விலாசம், அலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் மேலும் வட்டாரம் மற்றும் மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 36 எண்ணிக்கையிலான சக்கர வகையிலான அறுவடை இயந்திரங்களும் மேலும் 37 எண்ணிக்கையில் டிராக் வகையிலான அறுவடை இயந்திரங்களும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அறுவடைகாலங்களில் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயியின் மூலம் அவர்தம் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை இயந்திர உரிமையாளர்களை அலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு, தாங்களே வாடகையை நிர்ணயம் செய்து பயனடையுமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here