கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணம், செப். 28 –

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அகவிலைப்படி உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும். அதன் நிலுவைத் தொகை 70 மாதங்களுக்கு தாமதமின்றி உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களையும் சேர்க்க வேண்டும். மாதம் முதல் தேதியை ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களை வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசித் தீர்க்க வேண்டும். 2020 மே முதல் விருப்ப ஓய்வு வி.ஆர்.எஸ். மற்றும் இறந்த தொழிலாளர்கள் அனைத்து பண பலன்களை உடனே வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் அமைப்பு துணைத்தலைவர் கென்னடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர்கள் ரவி ஞானசேகரன் ஜீவானந்தம் பொருளாளர் கோவிந்தராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் கலந்து கொண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here