கும்பகோணம், செப் . 19 –
கும்பகோணத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் இப்பகுதி சிறுவர்கள் விளையாட்டு மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அச் சிறுவர்களிடையே கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்பதற்கான ஆர்வம் மிகுதி காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படுமோசமாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாததால், மாணவ, மாணவிகளின் கவனம் விளையாட்டு மீது திரும்பி உள்ளது. பல்வேறு விளையாட்டுகளையும், தற்காப்பு கலைகளையும் கற்பதில் பள்ளி சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக கராத்தே, சிலம்பரம், டேக்வாண்டோ, யோகா போன்ற கலைகளை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்
இதன் ஒரு பகுதியாக தனியார் திருமண மண்டபத்தில் தேக்வாண்டோ சங்கம் சார்பில் கலர் பெல்ட் தேர்வு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்களை தற்காத்துக் கொள்ள சிறப்பு பயிற்சி நடைபெற்றது இதில் 44 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் மேலும் அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற்ற மாணவ மணிகளுக்கு கலர் பெல்ட் மற்றும் கருப்பு பெல்ட் தேக்வாண்டோ மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் தேக்வாண்டோ நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெல்டுகளை வழங்கினார்கள்