செங்கல்பட்டு, செப். 8 –
உயர்கல்வி பயில தகுதி இருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பில் சேர முடியாத பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இலவச உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டும் வழக்கம் போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி எம்பியும் எஸ்ஆர்எம் உயர்கல்வி குழுமத்தின் நிறுவனருமான பாரிவேந்தர் ஏற்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, பெரம்பலூர், துறையூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் 300 பேருக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் கலை அறிவியல் வேளாண்மை அறிவியல் மேலாண்மை, பாராமெடிக்கல் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி பயில கல்விக் கட்டணம் உணவு மற்றும் விடுதி வசதியுடன் இலவசமாக பயில்வதற்கான வாய்ப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் இந்த சலுகைகள் அழைக்கப்படுவதாக தெரிவித்தார்.