திருவேற்காட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்த நிச்சய பரிசு பொருள் அன்பளிப்பை  அமைச்சர் நாசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவருக்கும் வழங்கினார்

திருவேற்காடு, செப் . 19 –

 

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மெகா கொரோனா -19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாநிலம் முழுவதும் பொது மக்களுக்கு இலவச தடுப்பூசிகளை செலுத்தும் திட்டத்தினை ஏற்படுத்தி கொரோனா தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்க பெரும் முயற்சி நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதற்காக முகாம் தொடர்பான பல்வேறு வகையில் அறிவிப்புகளையும் விழிப்புணர்வு தொடர் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை நோக்கி ஒவ்வொரு மாவட்டங்களும் போட்டி போட்டுக் கொண்டு தமிழக அரசின் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

 இந் நிலையில் கடந்த செப் 12 ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தும் இலக்கை நிர்ணயித்து அதில் அவ் இலக்கையும் தாண்டி சாதனையை ஏற்படுத்தியது.அதனை தொடர்ந்து இன்று மாவட்டம் முழுவதும் 770 சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி அதில் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவேற்காடு நாகராட்சி பகுதிகளில் 25 க்கும் மேற்பட்ட மெகா சிறப்பு கொரோனா -19 முகாம்களை அமைத்து 100 சதவீத இலக்கை அடைய பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அறிவிப்பின் படி இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் குறிப்பிட்ட முகாமில் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 85 சதவீதம் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் வசந்தி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சிறப்பு தடுப்பூசி முகாமை பால்வளத் துறை  அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்து, தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் டிபன் பாக்ஸ்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர திமுக செயலாளர் என்.இ.கே. மூர்த்தி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உடனிருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here