தமிழகம் முழுவதும் இன்று 2 வது முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. அது போன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை மற்றும் ஈக்காடுதாங்கல் இடங்களில் நடைப்பெற்ற இச்சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை, செப் . 19 –
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா தொற்று நோயில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுத்து கொரோனா தொற்றில்லா முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மருத்துவ அறிஞர்களின் அறிவுறுத்தல் படி அனைவருக்கும் தடுப்பூசி போடுவதால் மட்டுமே தமிழக மக்களை அத்தொற்றில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான சிறப்பான திட்டம் வகுத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கினையும் காலத்தையும் வகுத்துக் கொடுத்து விரைவில் தமிழகத்தை அத்தொற்றில் இருந்து மீட்பதே தமது அரசின் முதன்மையான பணியாக கருதி செயல்பட்டு வருகிறார்.
தலைமையில் இருப்பவர்கள் ஆணையிட்டால் மட்டும் போதாது தாமும் அதற்கான முன்னோடியாக விளங்க வேண்டும் என தனது தாயுமானவர் குணத்தை வெளிப்படுத்தும் விதமாக இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான சைதாப்பேட்டை மற்றும் ஈக்காடு தாங்கல் போன்ற இடத்தில் நாடைப்பெறும் மெகா கொரோனா சிறப்பு முகாம்களுக்கு நேராடியாக சென்று ஆய்வு நடத்தி அங்கு நடைப்பெறும் பணிகளை பார்வையிட்டார்.
அதன் பின்பு தடுப்பூசி செலுத்தியவர்கள் மத்தியில் தமிழக அரசின் சேவைகள் குறித்தும் அதற்கான முன்னெடுப்புகள் குறித்தும் மக்களிடம் கருத்தக்களை கேட்டறிந்தார்.
முதலமைச்சரின் உத்திரவின் படி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் அதி தீவிர தடுப்பூசி இயக்கமாக தற்போது நடந்து வருகிறது என்பதில் எந்த வித ஐயப்பாடும் மக்களிடம் இல்லை என்பதை பெரும்பான்மையான மக்களின் கருத்தாக உள்ளது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 26.8.2021 அன்று 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
கடந்த செப். 12 ஆம் நாள் நடந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 21,48,526 முதல் தவணை தடுப்பூசிகளும் 7, 42, 495 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மொத்தம் 28,91,021 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர மெகா கோவிட் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்றது. இதில் சைதாப்பேட்டை மற்றும் ஈக்காடுதாங்கல் மெகா கோவிட் சிறப்பு முகாம்களில் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்த போது உடன் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ( வருவாய் மற்றும் நிதி ) விஷூ மகாஜன் உடனிருந்தார்.

















