கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அங்கு கொள்ளையடித்த திருடன் முகம் தெரியாத படி ஹெல்மெட் அணிந்து அக் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். அக் கொள்ளையனைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கும்பகோணம், அக். 5 –

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவில் அருகே உள்ளது திருநறையூர் பிரதான சாலை, அச்சாலையில் அசோக் என்பவர் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இன்று காலை சற்று காலதாமதமாக கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதுடன் ஷட்டர் சரியாக மூடப்படாத நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், உள்ளே சென்று பார்த்த போது பணப் பெட்டியில் வைத்திருந்த  3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்க்கும் பொழுது இன்று அதிகாலை 2.30 மணியிலிருந்து 2. 45 மணிக்குள் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முகம் தெரியாதவாறு ஹெல்மெட் போட்டு  ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து பணப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது.

இக் கொள்ளைக் குறித்து உடன் கடையின் உரிமையாளர் அசோக் நாச்சியர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப் புகாரினைத் தொடர்ந்து, போலீசார் கடைக்கு வந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து ஹெல்மெட் அணிந்து பணத்தைக் கொள்ளையடித்த அத்திருடனைப்பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தொடர் விசாரணையும் மேற் கொண்டு வருகின்றனர்.

 

இன்று கடைக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

 

மேலும் நாச்சியார்கோவில் பகுதிகளில் சமீபகாலமாக கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதாகவும், இதனால் வியாபாரிகளின் மத்தியில் அச்சம் நிலவுவதாகவும் அப்பகுதி வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் இதுப் போன்று கொள்ளை நிகழ்ச்சிகள் நடைப்பெறாதவாறு இருக்க காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் சங்கங்களும் கோரிக்கைகளை வைக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here