கும்பகோணம், ஜன. 3 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார் கோவிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 63% பேர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கும் கோவாக்ஸின் தடுப்பூசி பணி இன்று தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாச்சியார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி 638 மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் அரசு தலைமை கொறடா கோவி செழியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கொரோனா குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் முழுமையாக அறிந்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அனைவரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள ஊக்கம் ஏற்படுத்த வேண்டும்.
என அரசு தலைமை கொறடா கேட்டுக் கொண்டார். திருவிடைமருதூர் வட்டத்தில் 15 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மேலும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி கோட்டாட்சியர் லதா வட்டாட்சியர் தங்க பிரபாகரன் தலைமை ஆசிரியர் அல்லி திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு ஒன்றிய செயலாளர் கூகுர் அம்பிகாபதி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





















