கும்பகோணம், ஜூலை. 31 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கலைஞர் பாசறையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்று மாணாக்கர்களிடையே சிறப்புரையாற்றிய கோவி செழியன் உங்களது படிப்பு முடிந்துவிடவில்லை. அடுத்த பட்டத்தை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பவை, வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல, உங்களது அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது. என்று பேசினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஒன்றியக்குழுத் துணைப்பெருந்தலைவர் கோ.க. அண்ணாதுரை, நகர செயலாளர் சப்பானி, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் மிசாமனோகரன், சுரேஷ், குமார், கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், அசோகன், அன்சாரி, சரண்யாசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.