கும்பகோணம், ஜூலை. 31 –
கும்பகோணத்தில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் இவர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் ஆவர். இவரது மனைவி சந்திரா (68) இந்நிலையில் இவர் இன்று காலை வழக்கம்போல் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் பேபி மற்றும் காவல்துறையினர் அருகிலிருந்த சிசிடிவி காட்சி மூலம் தங்கச்செயினை பறித்துச் சென்ற குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மேலும், இது குறித்து சந்திராவின் கணவர் சிவப்பிரகாசம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்ரீநகர் காலனிப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















