கும்பகோணம், நவ. 16 –
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நான்கு சவரன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற கொள்ளையன் தடுமாறிக் கீழே விழுந்ததால் பொதுமக்கள் கொள்ளையனைப் பிடித்து தங்கச் சங்கிலையை மீட்டு, அவனுக்கு அடி உதைக் கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோவில் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறித்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிய கொள்ளையனை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடித்து கொள்ளையினிடம் இருந்து 4 சவரன் சங்கிலியை மீட்டனர். பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கொள்ளையனை அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோவில் அருகே செக்கடி சந்து பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சந்திரா என்ற மூதாட்டியார் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சந்திரா அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின் அவனிடம் இருந்து 4 சவரன் தங்கச்சங்கிலியை சங்கிலி மீட்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து சங்கிலி பறித்த திருடனை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபரின் பெயர் சலீம் (30) என்றும் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் பிடிபட்ட சலீமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கரத்தில் வந்து முதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற காட்சிகள் அத்தெருவில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV யில் அக்காட்சி பதிவாகி உள்ளது.