தேசப்பக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்ளும் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஒருவரேனும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு இந்தியாவின் விடுதலைக்காக சிறை சென்றதுண்டா என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணம், ஜூன். 17 –
கும்பகோணத்தில் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தாங்கள்தான் தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளில் இருந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டு இந்தியாவின் விடுதலைக்காக சிறை சென்றவர்கள் ஒருவரேனும் உண்டா எனவும்,
மேலும் கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஒரு நாளாவது மருத்துவமனைக்குச் சென்று பிரதமர் மருத்துவர்களை சந்தித்து நோயின் தன்மை குறித்தோ, மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தோ, கேட்டதுண்டா ? என்றவாறு பல்வேறு கேள்விகளை எழுப்பி அக்கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் திராவிட மாடல் என்றால் என்னவென விளக்கம் கேட்கிறார்கள் எதிர் கட்சியினர் .. அவர்களுக்கு கூறிக்கொள்வேன் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா பேசினார்.
கும்பகோணம் மாநகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சாரங்கபாணி கீழவீதியில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இப்பெதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா எம்பி உரையாற்றும் போது சாதாரண குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த நான் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை படிப்பை முடித்து, அடுத்து பாராளுமன்ற உறுப்பினராகி மத்திய அமைச்சராகி பாராளுமன்றத்தில் பல்வேறு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களை திகைக்க வைத்ததுடன் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்த தன்னை போன்றவர்களை உருவாக்கியது திமுக, இதுதான் திராவிடர் மாடல் என்றும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்.
இந்தியாவில் எங்கும் கிடைக்காத இட ஒதுக்கீடு பெற்றது தான் திராவிட மாடல், இந்திய அரசியல் சட்டத்தின் இறையாண்மையின் மீது பதவிப்பிரமாணம் செய்து விட்டு மக்களவையில் ஜெய்ஸ்ரீராம் என முழங்குவது தான் ஆரிய மாடல்
கும்பகோணத்திலிருந்து சவால் விடுகிறேன் தாங்கள்தான் தேசப்பக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை போன்ற அமைப்புகளில் இருந்து யாரேனும் ஒருவராவது சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு இந்தியாவின் விடுதலைக்காக சிறை சென்றது உண்டா? மேலும், கொரோனா பெரும் தொற்றுக் காலத்தில் மாவீரன் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாளாவது வீட்டை விட்டு வெளியில் வந்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் நோயின் தன்மை குறித்து மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து கேட்டது உண்டா என அடுக்கடுக்கான கேள்விகளை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவிலேயே மருத்துவமனைக்குச் சென்று கவச உடையில் நோயாளியிடம் நலம் விசாரித்தார் என்றால் அந்த ஒரே தலைவர் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின்தான் என்றார்.
இப்பொதுக் கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாநகர துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.





















