திருவாரூர், ஜூன். 16 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்த இவர் மது குடிப்பதற்கு காசில்லாமல் தனது தாயாரிடம் பணம் கேட்டுள்ளார். தாயார் பணம் தர மறுத்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமெய்ஞானம் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார்.

இதனைப் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here