மயிலாடுதுறை, மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவுற்றது.

அதையடுத்து நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை தொடங்கி பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்து கோபுர கலசத்தில் புனித நீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது‌. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here