கும்பிடிப்பூண்டி, ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈகுவார் பாளையம், சூரப்பூண்டி, ஏடூர், சுண்ணாம்புகுளம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கடும் வெயிலிலும் சற்றும் களைப்படையாமல் களத்தில் கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனை தொடர்ந்து பேசியவர் தமிழக அரசின் நல திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
நீங்கள் கை சின்னத்திற்கு வாக்களித்தால் 100 நாள் வேலை திட்டத்தில் 150 நாட்களாக உயர்த்த பாடுபடுவேன், மேலும் உரிமைத் தொகை திட்டத்தினை உயர்த்துவேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் தரமான பள்ளிகளை சீரமைத்து கல்வி வழங்க பாடுபடுவேன் என்று பேசினார்,
அப்பிரச்சாரத்தின் போது அவருடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் ஆனந்த் குமார், உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி,கிளைகழக பொறுப்பாளர்களும் ,மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





















