கும்மிடிப்பூண்டி, ஆக. 18 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈகுவார்பாளையம், ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீடு கட்டுவதற்கான பணி ஆணை, உள்ளிட்ட சுமார் ரூ. 9 லட்சம் மதிப்பில் 420 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, மேல்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் 63 பழங்குடியினத்தை சார்ந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைக்கும் நிகழ்வை கும்மிடிபூண்டி உறுப்பினர் கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர், மாதர்பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.