மீஞ்சூர், ஜூலை. 31 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ளதும், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கொக்குமேடு கிராமமாகும் மேலும் இக்கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக உள்ளது. அதில் மிகவும் முக்கியத்துவ வாய்ந்த விழாவாக தீ மிதி திருவிழாவாகும்.

அதுப்போன்று இவ்வாண்டும் இத்திருக்கோயிலில் தீ மிதி திருவிழா வெகுச் சிறப்பாகவும், பாதுகாப்புடனும் நடைப்பெற்றது. அதில் பங்கேற்கும் பக்தர்கள் பத்து நாட்களுக்கு முன்பே கையில் காப்பு காட்டி, விரதம் இருந்து, பயப்பக்தியுடன் இவ்விழாவில் பங்கேற்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு காணிக்கையாக தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

மேலும் இவ்விழாவினை முன்னிட்டு திரளான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், கரகம் சுமந்தும்,  தீ மிதித்து  தங்களது நேர்த்தி  கடனை  மிக பயபக்தியுடன் செலுத்தி அம்மனை வழிப்பட்டனர்.

இதில் ஏரளாமான பெண்கள் பக்தி பரவசத்துடன் நடனமாடி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினார்கள். மேலும் இத் தீ மிதி விழாவில் பங்கேற்க மீஞ்சூர் காட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த திரளான பொதுமக்கள் வருகை தந்து அம்மனை தரிசித்தனர்.

மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் இவ்வம்மனை தொடர்ந்து வழிப்பட்டு வந்தால் வேண்டிய வரம் தருவார் எனவும், மேலும் கிரக தோஷங்கள், திருமண தடைகள், குழந்தை பாக்கியம் போன்ற நற் காரியங்கள் அனைத்தும் கிடைக்கவும்,  அப்பகுதி மக்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் 108 ஓம திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நம்பிக்கையுடன் பூஜைகள் செய்து வழிப்பட்டு வருகின்றனர்.

அதனால் இத்திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருப்பாதக அத்திருக்கோயில் பூசாரி தெரிவிக்கின்றார்.

அதுப்போன்று இவ்வாண்டு நடைப்பெறும் இத் தீமிதி திருவிழாவில் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிட திரளான பக்தர்கள் வருகைப் புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் அக்கிராமத்தினர் மற்றும் அறங்காவலர் ஜோதீஸ்வரர் உள்ளிட்டவர்கள் வெகுச்சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here