கும்பகோணம், பிப். 19 –
அண்ணா திமுகவை அக்கட்சியினர் இயக்கினால் இயற்கையாக நன்றாக இருக்கும், ஆனால் தற்போது அக்கட்சியை பாரதிய ஜனதா இயக்குவதாக தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும், மேலும், விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை எய்ம்ஸ் இது போல் பல பணிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து அப்பணிகள் நடைபெறுமா நடைபெறாதா என்ற தலைப்பில் ஒரு பேச்சு போட்டியையே நடத்தலாம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கும்பகோணத்திற்கு ரயில் மூலம் வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி அதானி குழுமம் குறித்து பிரதமர் இன்னமும் வாய் திறக்காமல் இருக்கிறார் என்றார். மேலும் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு அதிமுக தற்போது ஒன்று பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் நீங்கள் தான் அப்படி கூறுகிறீர்கள் அங்கு ஒற்றுமை இல்லை என்றும் ஈரோட்டில் மகத்தான வெற்றி கிடைக்கும் என்றும் இந்தத் தேர்தல் வெற்றி ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லை என்றும் இந்த அரசின் 18 மாத கால ஆட்சிக்கு மக்கள் சான்றிதழ் கொடுக்கக்கூடிய தேர்தல் இது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து அவர் விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை எய்ம்ஸ் இது போல் பல பணிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து நடைபெறுமா நடைபெறாதா என்றாவறு தலைப்பிட்டு ஒரு பேச்சுப் போட்டிய நடத்தலாம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கும்போது அண்ணா திமுகவை அண்ணா அக்கட்சியினரே இயக்கினால் நன்றாக இருக்கும் எனவும் ஆனால் தற்கோது அக்கட்சியினை பாரதிய ஜனதா இயக்குவதால்தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்






















