ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிதயில் 16வது பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடந்தது. விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் முகம்மது யூசப் தலைமை வகித்தார். இயக்குனர் ஜனாப் ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல் ரஜபுதீன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழா பேரூரையில் துணை வேந்தர் ராஜேந்திரன் பேசுகையில், மாணவர்கள் நிச்சயமாக தங்களது பெற்றோர்களை மிகச் சிறந்த முறையில் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
மேலும் அறிவுக் கண் திறந்த ஆசிரியர்களை மதித்து போற்ற வேண்டும். உலக அரங்கில் இந்தியா தொழில் நுட்பத்தில் ஒரு மேலோங்கிய நாடாக திகழ்கிறது, அதிலும் இந்திய அளவில் சமுதாய முன்னேற்றத்தில் தமிழ் சமுதாயம் மிக தொன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதற்கு கீழடி அகழ்வாய் மிக முக்கிய சாட்சியமாகும். இந்த தொன்மையான நாகரீகம் சங்ககால இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
சங்ககால இலக்கிய நுாலான திருக்குறள் ரஷ்யா நாட்டில் டங்ஸ்டன் பேழையில் பொறிக்கபட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் தமிழ்ச் சமுதாய தொன்மையினை போற்றி பாதுகாக்க வேண்டும். பட்டம் பெறும் பட்டதாரிகள் தங்களுக்கான இலட்சியம் வகுத்துக் கொண்டு அதற்காக அயராது உழைக்க வேண்டும். அது தமது இலட்சியமாக இருந்தாலும் நாட்டன் இலட்சியமாக இருந்தாலும் அதன் இலக்கை அடையும் வரை உழைக்க வேண்டும், இவ்வாறு பேசினார்.
விழாவில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன், நெறியாளர் முகம்மது ஜஹபர், முகம்மது சதக் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் அலாவூதீன், முன்னாள் எம்எல்ஏ ஹசன்அலி, ராமநாதபுரம் சைடெக் கல்வி நிறுவன முதல்வர் ரியாஸ் அகம்மது, ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்கிர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம், முகம்மது சதக் பப்ளிக் பள்ளி முதல்வர் ஆலீயா, ராமநாதபுரம் முகம்மது சதக் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் நாஜிரா பானு உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பல்கலை அளவில் சாதனை படைத்த 12 மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. முதுகலை பட்டதாரிகள் 43 பேருக்கும் இளங்களை பட்டதாரிகள் 269 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. முகம்மது சதக் அறக்கட்டளை செயலர் சர்மீளா மற்றும் இயக்குனர்கள் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.