மீஞ்சூர், செப். 02 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வருகின்ற 4 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அந்நிகழ்வு அப்பகுதியில் அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் அவ்வூர்வலம் நடைப்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மீஞ்சூர் காவல்நிலையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று மீஞ்சூர் பஜார் பகுதியில் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. அணி வகுப்பில் செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிரஞ்சீவி மற்றும் உதவி ஆய்வாளர் வேலுமணி ஆகியோர் அணிவகுத்து சென்றனர். அணி வகுப்பு மீஞ்சூர் பஜார் வீதி மற்றும்  .அரியன்வாயல் ஆகிய பகுதிகளில் அணிவகுத்து சென்று மீஞ்சூர் காவல் நிலையம் வந்தடைந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here