காஞ்சிபுரம், செப் 28 –

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் கிராமத்தில் பியூர் பெட்ரோ கெம் என்ற இன்ஜின் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இதில் சுமார் 25 பேர் நிரந்தர தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு CITU சார்பாக தொழிலாளர் சங்கத்தை நிறுவியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிற்சாலை நிர்வாகம் இந்தத் தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப பணியாளர்களை கழிவறைகளை கழுவு சொல்லியும், கட்டிடங்களை சுத்தம் செய்யச் சொல்லியும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து எதிர்த்து கேள்விகள் கேட்டதால், ஐந்து ஊழியர்களை எந்த முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துகுமார் தலைமையில் குடும்பத்தோடு அந்த தொழிற்சாலையின் முன்பு கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது,

தங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here